முறையான விசா இல்லாம ஏஜென்ட்-க்கு லச்ச லச்சமா கொடுத்து வெளிநாட்டுல போய் மாட்டிகிறாங்க நம்பாளுங்க.. வெற்றி கொடிகட்டு படம் மாதிரி இன்னும் நடந்துகிட்டு தாங்க இருக்கு,..
அதுலயும் முக்கியமா அரபு நாடுகளுக்கு போய் மாட்டுனா அவ்ளவுதான்.. ஒட்டகம் மேய்க்க விட்ட்ருராங்கே.. மாசம் 10000 ரூபாய் சம்பளம்.. தங்க ஒரு தொழுவம் மாதிரி ஒரு இடம், சாப்பிட குப்பூஸ் (பராத்தா மாதிரி இருக்கும்-ங்க.. 20 வருஷமா இது ஒன்னு தான் வில ஏராமா இருக்கு.. நம்ப ஊரு காசுக்கு ரூ 2) . இதான் வாழ்கை. நம்பாளுங்க ஊருக்குள்ள வாங்குன கடன அடைக்கவே ஒரு வருஷம் ஆகிடும்..அதன் பின் சேமிப்பு காலம். எப்படியும் குறைஞ்சது 5 வருஷம் இருக்காங்க.. சிறை வாசம் மாதிரி தான்..
சில பேர் வெயில் தாங்க முடியாம இறந்து கூட போயுடறாங்க.. அப்படி இறந்தா அவங்களோட உடல ஊருக்கு அனுப்பாம, அங்கயே அடக்கம் செஞ்சிடறாங்க..
இன்னும் பல பேர், மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு திரும்பி வராங்க..
அப்படி கஷ்டப்பட்டு, இன்னல்பட்டு ஊருக்கு வரதுக்குள்ள பாதி வாழ்கை போயிடுது..
இந்த சுவாரசியமான கதைய படிங்க.. இவரும் ஒரு உதாரணம்.
Image-யை save செய்து படிக்கவும்..
இப்படி வெளிநாடுகள்ள கஷ்டபடரவுங்க மட்டும் 2500 தமிழர்கள் இருக்காங்கலாம். ஏன் இப்படி எல்லாரும் கஷ்டப்படறாங்க-னு கூட நினைக்க தோணும். இதுக்கு ஊர்லயே இருகலாமே-னு கேக்க தோணும்..
ஹ்ம்ம்... மனுச பிறவியா பிறந்துடோமே.. வாழ்ந்து தான் ஆகணும்..
இப்படி வெளிநாடுகள்ள கஷ்டபடரவுங்க மட்டும் 2500 தமிழர்கள் இருக்காங்கலாம். ஏன் இப்படி எல்லாரும் கஷ்டப்படறாங்க-னு கூட நினைக்க தோணும். இதுக்கு ஊர்லயே இருகலாமே-னு கேக்க தோணும்..
ஹ்ம்ம்... மனுச பிறவியா பிறந்துடோமே.. வாழ்ந்து தான் ஆகணும்..
8 comments:
இப்படி ஏமாறுபவர்களைக் கண்டால் கஷ்டமாகத்தான் உள்ளது.
இப்படி பணம் கொடுத்துப் போவதில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.
---
உண்மையிலேயே அவர் வித்தியாசமான மனிதர்தான்.
//ஹ்ம்ம்... மனுச பிறவியா பிறந்துடோமே.. வாழ்ந்து தான் ஆகணும்..//
உண்மைதான். வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில்தான் எல்லோரும் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். என்ன செய்வது பலர் இவ்வாறு சென்று ஏமாந்து போகிறார்கள்.
நல்ல சிந்தனை பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கள், நானும் தொடர்கிறேன். நன்றி.
இப்படி வெளிநாடுகள்ள கஷ்டபடரவுங்க மட்டும் 2500 தமிழர்கள் இருக்காங்கலாம்.
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?
வெளிநாடு என்ற மோகத்தில் உல் நாட்டில் சரியாக வேலை செய்யாமல் இருப்பவர்கள் என்ன சொல்ல
வெளி நாட்டில் உள்ளவர்களின் மன நிலையை காட்டுகிறது உங்கள் பதிவு
/* எவனோ ஒருவன் said...
இப்படி ஏமாறுபவர்களைக் கண்டால் கஷ்டமாகத்தான் உள்ளது. */
வாங்க எவனோ ஒருவன்.. குடும்ப வறுமை காரணமாக நம் மக்கள் அவ்வாறு தள்ளப்படுகிறார்கள்..
/* பாலாஜி said...
நல்ல சிந்தனை பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கள், நானும் தொடர்கிறேன். நன்றி. */
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாலாஜி..
/* இது நம்ம ஆளு said...
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? */
வாங்க இது நம்ம ஆளு...
/* Suresh Kumar said...
வெளிநாடு என்ற மோகத்தில் உல் நாட்டில் சரியாக வேலை செய்யாமல் இருப்பவர்கள் என்ன சொல்ல */
சரியா சொன்னீங்க Suresh Kumar.. வருகைக்கு நன்றி..
/* Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வெளி நாட்டில் உள்ளவர்களின் மன நிலையை காட்டுகிறது உங்கள் பதிவு */
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்..
சிந்திக்க வைத்த ஒரு பதிவு தொடருங்கள் நண்பா..
/* சந்ரு said...
சிந்திக்க வைத்த ஒரு பதிவு தொடருங்கள் நண்பா.. */
வாழ்த்துக்களுக்கு நன்றி சந்ரு...
Post a Comment