Tuesday 1 September 2009

2020 -இல் தமிழ்நாடு ஓர் பார்வை -பகுதி 1

தலைப்ப பாத்தவுடனே நான் எதோ ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லப்போறேன்-னு நெனைக்காதீங்க.

இப்படியே நம்ப தமிழ் நாடு 2020 வரைக்கும்இருந்தா எப்படி இருக்கும்னு நேத்து நைட்டுதூங்கறப்ப யோசிச்சுபாத்தேன். எனக்கே சிரிப்புவந்துச்சு..

நான் கண்ட காட்சி நிறைவேறினால்...



ஹீ ஹி ஹீ...
  • தமிழ்நாடு தனி நாடு ஆனது..தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான தி.மு. மற்றும் .தி.மு.இணைந்தன. (எப்படி..இப்ப சந்தோஷமா..??)
  • தமிழ்நாட்டு பிரதமமந்திரி டாக்டர் மு கருணாநிதி தனது 95 -வது பிறந்தநாளைசென்னையில் கொண்டாடினார்.
  • துணை பிரதம மந்திரி செல்வி ஜெயலலிதா, வடசென்னை முதல்வர் மு ஸ்டாலின், தென்சென்னை முதல்வர் மு..அழகிரி, மத்திய சென்னை முதல்வர்தயாநிதிமாறன், மதுரை முதல்வர் விஜயகாந்த் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் உள்ளது" என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்..
  • தமிழகம் முழுவதும் புல்லட் ரயில் இயக்கப்பட்டது.. மணிக்கு 600-கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் சென்னைலிருந்து மதுரைக்கு 1 மணி 15 நிமிடத்தில் சென்றடையும்.
  • "பறக்கும் கார்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விரைவில் தீர்க்கப்படும்" என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது,.
  • ATM-களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க "தெருவுக்கு ஒரு ATM" என்றதிட்டத்தை அரசு விரைவில் துவக்கும் என்று அறிவித்துள்ளது..
  • TASMAC-யின் நிகர லாபம் 600 கோடிகளை தொட்டது.. தமிழ்நாட்டில் அதிகலாபத்தில் செல்லும் துறைகளில் முதல் இடத்தில பிடித்து TASMAC.
  • பொதுதேர்வுகளில் bit அடிப்பதை தடுக்க ஒவ்வரு தேர்வு அறைகளிலும்கண்காணிப்பு கருவி பொருத்துபடவுள்ளது.. இதனால் கண்காணிப்புஅதிகாரிகளின்றி தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்விதுறை அமைச்சகம்கூறிவுள்ளது..
குறிப்பு: மேற்கூறியவை அனைத்தும் கற்பனையே. எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. நினைத்துபார்க்க மட்டுமே. சிந்திக்க இல்லை என்பதை கூறிகொள்கிறேன்..

Saturday 15 August 2009

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.



அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...!!!


யாதும் ஊரே..!! யாவரும் கேளீர்...!!!

Sunday 9 August 2009

கடலை சொற்பொருள் விளக்கம்

டலை என்பது எந்தவித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிபிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்குள் தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும்.

இக்கடலையாகபட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது. இதை ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.. அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைக்கிறது.

இன்னொரு நண்பர் மாதம் 1000 ரூபாய் வரை மொபைல்-க்கு பணம் கட்டுகிறார்.. எல்லாம் கடலை செயல்..

இவ்விஷயத்தில் பெண்கள் மிகவும் கெட்டிகாரதனமாக மாதந்தோறும் 20000 sms-கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்..

அதைத்தவிர மினிமம் பாலன்ஸ் மெயின் டைன் செய்து missed call மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்..இதனால் அவர்களுக்கு பொருள் இழப்பு அதிகமில்லை. இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிகிறது.
நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும். போன்-நிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை.

நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில வினாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரில் அது கிடையாது, அதற்காக நீங்கள் சமயோசிதமாக இருக்க வேண்டும். அவை கடலை போட தானாகவே கை கூடும். இல்லைஎன்றால் விடுங்கள்.. வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.

இருந்தாலும் நமது சிறிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புக்கள்:

சிறப்பாக கடலை போட சில வழிகள்:

1. நேரில் பேசும் போது கண்ணை பார்த்து பேசவும். அதிகம் வழியாதீர்கள். அல்லது கைக்குட்டை வைத்துகொள்ளவும்.

2. பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு P.S.வீரப்பா போல சிரிக்கவும். சாகும் வரை சிரிக்க முயலுங்கள். அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்-ஏ சொல்லமாட்டார்.

3. அடிக்கடி ஆக்சுவல்லி என்ற வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்துக்கு உதவும்). ஆக்சுவல்லி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்த படித்த கணவான் என்று எண்ணக்கூடும்.

4. பேசும்போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும். (காது குடைவது, மூக்கு நோண்டுவது போன்றவை)

5. அடிக்கடி உங்களை பற்றி பீத்திகொள்ளாதீர்கள். அதை பூடகமாக செய்யவும்.

6. எந்தஒரு கட்டத்திலும் "அப்புறம்" என்று சொல்லி விடாதீர்கள். அது கடலையை உடனே நிறுத்தி விடும்.


குறிப்பு:
என் அருமை நண்பர் அஹ்மெத் அனுப்பிய மின்னஞ்சலின் தழுவல்.

Wednesday 5 August 2009

வேண்டாம் வெளிநாடு

எல்லாரும் வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும், குடும்பத்த காப்பாத்தனும் -னு நினைக்கிறோம்.. அப்படி வெளிநாட்டுக்கு போய் கஷ்டப்படரவுங்க தான் அதிகம்..

முறையான விசா இல்லாம ஏஜென்ட்-க்கு லச்ச லச்சமா கொடுத்து வெளிநாட்டுல போய் மாட்டிகிறாங்க நம்பாளுங்க.. வெற்றி கொடிகட்டு படம் மாதிரி இன்னும் நடந்துகிட்டு தாங்க இருக்கு,..

அதுலயும் முக்கியமா அரபு நாடுகளுக்கு போய் மாட்டுனா அவ்ளவுதான்.. ஒட்டகம் மேய்க்க விட்ட்ருராங்கே.. மாசம் 10000 ரூபாய் சம்பளம்.. தங்க ஒரு தொழுவம் மாதிரி ஒரு இடம், சாப்பிட குப்பூஸ் (பராத்தா மாதிரி இருக்கும்-ங்க.. 20 வருஷமா இது ஒன்னு தான் வில ஏராமா இருக்கு.. நம்ப ஊரு காசுக்கு ரூ 2) . இதான் வாழ்கை. நம்பாளுங்க ஊருக்குள்ள வாங்குன கடன அடைக்கவே ஒரு வருஷம் ஆகிடும்..அதன் பின் சேமிப்பு காலம். எப்படியும் குறைஞ்சது 5 வருஷம் இருக்காங்க.. சிறை வாசம் மாதிரி தான்..

சில பேர் வெயில் தாங்க முடியாம இறந்து கூட போயுடறாங்க.. அப்படி இறந்தா அவங்களோட உடல ஊருக்கு அனுப்பாம, அங்கயே அடக்கம் செஞ்சிடறாங்க..

இன்னும் பல பேர், மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு திரும்பி வராங்க..

அப்படி கஷ்டப்பட்டு, இன்னல்பட்டு ஊருக்கு வரதுக்குள்ள பாதி வாழ்கை போயிடுது..

இந்த சுவாரசியமான கதைய படிங்க.. இவரும் ஒரு உதாரணம்.




Image-யை save செய்து படிக்கவும்..

இப்படி
வெளிநாடுகள்ள கஷ்டபடரவுங்க மட்டும் 2500 தமிழர்கள் இருக்காங்கலாம். ஏன் இப்படி எல்லாரும் கஷ்டப்படறாங்க-னு கூட நினைக்க தோணும். இதுக்கு ஊர்லயே இருகலாமே-னு கேக்க தோணும்..

ஹ்ம்ம்... மனுச பிறவியா பிறந்துடோமே.. வாழ்ந்து தான் ஆகணும்..

Saturday 1 August 2009

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..


Wednesday 29 July 2009

விவாகமும் விவாகரத்தும்..


கலி முத்திவிட்டது-னு சும்மாவா சொல்றாங்க.. பதிவோட தலைப்ப பாத்தவுடனே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்..

ஆமாங்க.. கல்யாணம் பண்ணிபார் வீட்ட கட்டிப்பார்-னு சொல்லுவாங்க பெரியவங்க .. ரெண்டுமே கஷ்டம்-னு அத அனுபவிச்சவுங்க சொல்லுவாங்க..

நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.

லச்ச-லச்சமா செலவு செஞ்சு கல்யாணம் பண்றாங்க. கொஞ்ச நாள் கூட சந்தோஷமா வாழ மாட்றாங்க.. "நீ உன் வழிய பாரு.. நா என் வழிய பாத்துக்றேன்"-னு easy-ஆ சொல்லிட்டு பிரிஞ்சிட்றாங்க..

ஏதோ chemistry-ஆம்.. அது இல்ல-னு சொல்லி விலகிடறாங்க..

செரி.. வீட்ல பாத்து வெச்ச கல்யாணம்-தான் இப்டின, சில சமயத்துல காதல் கல்யாணமும் தோல்வியவே தழுவுது..

இதலாம் மீறி வாழ்கைல ஜெய்கிரவுங்க கொஞ்சம் தான்..

ஒன்னு வாழ்கை- வெற்றி அடைறாங்க.. இல்லாட்டி வழக்குல வெற்றி அடைறாங்க (எப்படி..??)..

இதுல Living-together-னு ஒரு கன்றாவி வேற இப்ப வர ஆரம்பிச்சிடுச்சுங்க..

சம உரிமை, சம உரிமை-னு சொல்றாங்களே, அது கூட ஒரு காரணம்-னு சொல்லலாம்..

இந்தியாவில் தற்போது விவாகரத்துஅதிகரித்துள்ளது. குடும்ப நீதிமன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள்நிலுவையில் உள்ளன. இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில்தினமும் 15 விவாகரத்து வழக்குகள்பதிவாகின்றன.


இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்றபாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...

சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதுக்கெல்லாம் distance தாங்க காரணம்... விட்டுக்கொடுத்து போனாலே எல்லா பிரச்சனையும் தீர்ந்துபோய்டும்-கிரது என்னோட கருத்து..

இப்படி
வெரப்பா இருந்தா ரொம்ப கஷ்டம்ங்க ...

Sunday 26 July 2009

சுல்தானை ஏதிர்நோக்கி..


சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் "சுல்தான் தி வாரியர்" எனும் அனிமேஷன் படம் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளதாம்.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெளியிடும் உரிமையை அனில் அம்பானியும், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது நமக்கு அறிந்ததே.






12 மொழிகளுக்கு மேல் இந்த திரையிடப்போறாங்களாம். 3500 பிரதி போட்ருக்காங்களாம்.

இந்த படத்தின் உத்தேச பட்ஜெட் ரூ.60 கோடி.

100 சதவிகித வேலைகளும் முடிஞ்சுபோச்சு.. இந்த படத்த எந்த வியாழக்கிழமை ரிலீஸ் செய்யலாம்னு தேதி பாக்கறாங்கலாம்.

முழு நீள 3 டி அனிமேஷன் படமானா சுல்தான் தி வாரியர், இந்தியாவின் முதல் கிராபிக்ஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியும் சௌந்தர்யாவும் இப்போ ரொம்ப பிஸி. நம்ப தலைவர் எந்திரன் ஷூட்டிங்-ல பிஸி-ஆ இருக்கார். சௌந்தர்யா கோவா படத்தயாரிப்புல ரொம்பவே பிஸி-ஆ இருக்காங்களாம்.. கோவா படத்த தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிரலாம்னு ஒரு முடிவோட இருகாங்க.

இன்னொரு குட்டி நியூஸ்: ஜெர்மனி-ல சந்திரமுகி படத்த "Der Geisterjäger"-ங்கற பேர்ல ரிலீஸ் பண்ணாங்களாம்.. அந்த படம் அங்கயும் வசூல்-ல சாதன படச்சுச்சாம். நம்ப தலைவர் கலக்குராருங்க..
பாக்காதவங்களுகாக அந்த படத்தோட வீடியோ காட்சி ..



Wednesday 22 July 2009

தோசை நேற்றைய விலை 40 ரூபாய் .. இன்றைய விலை 50 ரூபாய் ...


அரிசி, பருப்புகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் தமிழக ஹோட்டல் மெனு கார்டுகளில் உள்ள மெனுக்களின் விலை விரைவில் உயரப்போகிறது.. துவரம் பருப்பு விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 100-ஐத் தொட்டது. இதேபோல் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நெய், புளி, மிளகாய்வற்றல், உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு என எல்லா பொருட்களின் விலையும் ஏறுமுகமாவே உள்ளது.

கொஞ்சநாளைக்கு முன்னாடி எல்லா ஹோட்டல்-லயும் ஜனதா சாப்பாடு-ன்னு அறிமுகப்படுதுனாங்க.. சும்மா சொல்ல கூடாதுங்க.. நல்ல வரவேற்ப்பு.. 20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு,சாம்பார்,ரசம்,பொறியல்-னு மக்களுக்கு தந்தாங்க..

ஜனதா சாப்பாடு கிடைக்கும் -னு பெயிண்ட்-ல எழுதின போர்டு காயரதுக்குள்ள அந்த திட்டத்தையே நிறுத்திடாங்க..

இப்போ எல்லா ஹோட்டல்-லும் நம்ப சரவணபவன், வசந்தபவன், சங்கீதா மாதிரி ஆகிப்போசுங்க.. நானும் ஊருக்குள்ள போய் ஒரு இட்லி கடைய நிறுவி கல்லாவுல உட்கார்ந்துரலாம்னு இருந்தேன்.. என் நெனப்புல பருப்பு விழுந்துருச்சுங்க..

ஒரு குடும்பம் டிபன் சாப்பிட போனா இப்போ குறைஞ்சது 1000 ரூபாய் எடுத்து வைக்கணும்.

சாப்பாடுக்குதான் இந்த நிலைமைனா டிபன் மெனுக்களை பற்றி சொல்லவே வேணாம்.

என்று தணியும் இந்த விலைவாசி உயர்வு?

உங்கள் கவனத்திற்கு: வெளி நாடுகளில் உள்ள தமிழ் ஹோடேல்களிலும் இதே செலவுதாங்க ஆகுது..

Monday 20 July 2009

மைக்கேல் ஜாக்சன் வாழ்கையில் நிகழ்ந்த பெரிய விபத்து

யுஎஸ் வீக்லி என்னும் பத்திரிகை இது வரை வெளிவராத ஒரு வீடியோ காட்சியை தற்போது வெளிட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று பெப்சி நிறுவனத்திற்காக ஒரு விளம்பர படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஜாக்க்சனை சுற்றி பட்டாசுகள் வெடிக்க, படிகளில் இறங்கி வந்து நடனம் ஆடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. பல முறை படப்பிடிப்பு நடத்தியும் சரியாக வராததால் மீண்டும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆறாவது முறையாக படம் பிடிக்கப்பட்டபோது பட்டாசுகள் குறுப்பிட்ட நேரத்திற்கு முன்பே வெடித்து விட்டன.ஜாக்சனின் தலையிலும்,முகம்,உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.தலையில் தீப்பிடித்து எரிந்தது சில வினாடிகள் பின்பே ஜாக்சனுக்கு தெரிந்தது.அதற்குள் பெரும்பாலான முடிங்கள் கருகி விட்டன.உடன் படப்பிடிப்பு குழுவினர் விரைந்து தீயை அணைத்து ஜாக்சனை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.இந்த விபத்து காரணமாக பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டி வந்தது.அதற்காக வலி நிவாரணிகளை அதிக அளவு எடுத்து பின்னர் அதற்கே அடிமையாகும் நிலை ஏற்பட்டது.இதுவரை ஒன்றிரெண்டு புகைப்படங்கள் மட்டுமே இந்த விபத்து பற்றி வெளிவந்துள்ளது.



இப்போது தான் முதன் முறையாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.பெப்சி நிறுவனம் நஷ்ட ஈடாக 1.5 மில்லியன் டாலர்களை ஜாக்சனுக்கு கொடுத்தது. அதை அவர் தொண்டு நிறுவனத்திற்கு அவர் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால்......

Saturday 18 July 2009

வக்கீல்களை கிண்டல் அடித்த சிவகாசி படம் - மன்னிப்பு கேட்கிறார் இளைய தளபதி

சிவகாசி திரைப்படத்தில் வக்கீல்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதுக்காக நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் A.M.ரத்னம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக நன்றி தெரிவித்தால் மட்டுமே ஏற்ப்போம் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வழக்கின் அடுத்த hearing அடுத்த வாரம் வரவுள்ளது. இந்தநிலையில் A.M.ரத்னம், விஜயிடம் தொடர்புகொண்டு இந்த பிரச்சனையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த விசாரணையின் போது விஜய் மன்னிப்புகேட்பார் எனத் தெரிகிறது.



இன்னொரு குட்டி news: இயக்குனர் பேரரசு நம்ப சூப்பர்ஸ்டார்கிட்ட ஒரு கதை சொல்றதுக்காக காத்திருக்கிறார். பாவம் நம்ப தலைவர்.

Thursday 16 July 2009

வானிலை (தடு)மாற்றம்.!


கத்திரி வெயில் முடிஞ்சும் இன்னும் இந்த வெயிலோட தாக்கம்குறைஞ்சபாடில்லை.

இதுனால எவ்ளோ பிரச்சனைகள் நமக்கு.. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரஉற்பத்தி பாதிப்பு, காய்கறிகள் தானியங்களின் விளைச்சல் பாதிப்பு, விலைவாசிஉயர்வுனு சொல்லிகிட்டே போகலாம்.

உலகம் அழியப்போகுதுனு எல்லாரும் பீதிய (?) கிளப்புறாங்களே, அதுஉண்மையா போயுருமோனு கூட சந்தேகம் வருது.

எதுனால இப்டி இருக்குனு தெரிஞ்சிக்கலாம்னு வலைல விழுந்தேன்.



தட்பவெப்ப நிலை மாற்றத்த இரண்டு வகை காரணங்களா பிரிக்கலாம்.

1. இயற்கையான காரணங்கள்

2. மனிதனால் ஏற்படும் காரணங்கள்

வெப்பநிலை மாற்றங்களுக்கு நிறைய இயற்கையான காரணங்கள் உள்ளன. கண்டங்களின் விலகல், எரிமலைகள், கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிசரிவுஇதற்கான சில முக்கிய காரணிகள்.

இப்ப நம்ப இரண்டாவது காரணத்துக்கு வருவோம். நம்பாளுங்க தான் எதுனாலும்முதல்ல வந்துருவாங்களே. இருக்கிற ஊர சிங்காரமா ஆக்குரேனு மரத்தவெற்றது, Special Economic Zone உருவாக்குரோம்னு விவசாய நிலைத்தஅழிக்கிறது, நிலக்கரி பெட்ரோல் டிசெல்னு பயன்படுத்ரனால நமக்கே தெரியாமநாம அழிஞ்சு போய்ற்றுகோம்ங்கறது மறைக்க முடியாத உண்மை.

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம்"-னு எனக்கு விவரம் தேரிஞ்சதுலேந்து அரசுசொல்லிட்டுதான் இருக்கு. அரசும் அப்ப அப்ப "ஒரு லச்சம் மரகன்றுகள்நடுவிழா"-னு சொல்லி மரத்த நடராங்கலே தவிர அத பாதுகாக்ரதில்ல. அரசோடஅறிக்கைகள் வெறும் அறிக்கைகளாகவே இருந்துட்டுருக்கு.

கடந்த 1969ம் ஆண்டு முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெப்ப நிலை எப்படி இருந்தது என்பது குறித்துசென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்தது

மார்ச் மாதம் 32 டிகிரியா ஆரம்பிக்கும் கோடை காலம் 38 டிகிரி வரைக்கும்இருக்குமாம்.

ஆனா 2009ம் ஆண்டு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் மற்றொருஆய்வறிக்கையை வெளியிட்டது.

மார்ச் மாதம் 35 டிகிரியா ஆரம்பிக்கும் கோடை காலம் 42 டிகிரி வரைக்கும்இருக்காம்.

இன்னமும் நம்ப ஊர்ல அசோகர் நட்ட மரங்களதான் பாக்க முடியுது. இப்படியேபோச்சு-னா நமக்கு பின்னால வரும் சந்ததிகளுக்கு மரங்கள பாட புத்தகத்துலபடமா தான் பாக்க முடியும்.

மரம் வளர்ப்போம்.. உயிர் கொடுப்போம்.

Tuesday 14 July 2009

இனிதே என் பயணத்தை துவங்குகிறேன்!!

வணக்கம் நண்பர்களே..

கார்த்திக்பதிவுகள் மூலம் என்னுடைய blog பயணத்தை இனிதே துவங்கி உள்ளேன்..
என்னுடைய எண்ணச் சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உங்களுடைய மேலான ஆதரவை எதிர்நோக்கி என் பயணத்தை துவங்குகிறேன்!!

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. -திருக்குறள்

----

மேட்டர்-க்கு வரேன்.. நானும் எதாச்சும் வேலை கிடைக்கும், மாறிடலாம்-னு இருந்தேன்.. எப்படியும் ஒரு jump அடிச்சிரலாம்னு இருந்தப்போ தான் சுனாமி மாதிரி ஆள் குறைப்பு (Layoff) சம்பவம் நிகழ ஆரம்பித்தது..

இப்போதைக்கு வேலை மாறது கஷ்டம்-னு தெரிஞ்சு போச்சு.. கொஞ்ச நாளைக்கு இருக்கிற வேலைலயே seat-a போடுவோம்-னு முடிவுசெஞ்சுடேன்.. செரி. உருபிடியா பண்ணலாம்-னு தலைய சொரிஞ்சிட்டு இருந்தப்போ தான் பளீர்னு பல்பு எரிஞ்சது..

நாமு
ம் ஒரு blog ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு..

சும்மா ஒரு முயற்சி.. அவ்ளோதான்.. படிச்சிட்டு திட்டிடாதிங்க ..

சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன்..

உங்க
ளுடைய கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன்..

நன்றி.