இக்கடலையாகபட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது. இதை ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.. அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைக்கிறது.
இன்னொரு நண்பர் மாதம் 1000 ரூபாய் வரை மொபைல்-க்கு பணம் கட்டுகிறார்.. எல்லாம் கடலை செயல்..
இவ்விஷயத்தில் பெண்கள் மிகவும் கெட்டிகாரதனமாக மாதந்தோறும் 20000 sms-கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்..
அதைத்தவிர மினிமம் பாலன்ஸ் மெயின் டைன் செய்து missed call மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்..இதனால் அவர்களுக்கு பொருள் இழப்பு அதிகமில்லை. இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிகிறது.
அதைத்தவிர மினிமம் பாலன்ஸ் மெயின் டைன் செய்து missed call மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்..இதனால் அவர்களுக்கு பொருள் இழப்பு அதிகமில்லை. இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிகிறது.
நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும். போன்-நிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை.
நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில வினாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரில் அது கிடையாது, அதற்காக நீங்கள் சமயோசிதமாக இருக்க வேண்டும். அவை கடலை போட தானாகவே கை கூடும். இல்லைஎன்றால் விடுங்கள்.. வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.
நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில வினாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரில் அது கிடையாது, அதற்காக நீங்கள் சமயோசிதமாக இருக்க வேண்டும். அவை கடலை போட தானாகவே கை கூடும். இல்லைஎன்றால் விடுங்கள்.. வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.
இருந்தாலும் நமது சிறிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புக்கள்:
சிறப்பாக கடலை போட சில வழிகள்:
1. நேரில் பேசும் போது கண்ணை பார்த்து பேசவும். அதிகம் வழியாதீர்கள். அல்லது கைக்குட்டை வைத்துகொள்ளவும்.
2. பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு P.S.வீரப்பா போல சிரிக்கவும். சாகும் வரை சிரிக்க முயலுங்கள். அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்-ஏ சொல்லமாட்டார்.
3. அடிக்கடி ஆக்சுவல்லி என்ற வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்துக்கு உதவும்). ஆக்சுவல்லி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்த படித்த கணவான் என்று எண்ணக்கூடும்.
4. பேசும்போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும். (காது குடைவது, மூக்கு நோண்டுவது போன்றவை)
5. அடிக்கடி உங்களை பற்றி பீத்திகொள்ளாதீர்கள். அதை பூடகமாக செய்யவும்.
6. எந்தஒரு கட்டத்திலும் "அப்புறம்" என்று சொல்லி விடாதீர்கள். அது கடலையை உடனே நிறுத்தி விடும்.
குறிப்பு: என் அருமை நண்பர் அஹ்மெத் அனுப்பிய மின்னஞ்சலின் தழுவல்.
15 comments:
///4. பேசும்போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும். (காது குடைவது, மூக்கு நோண்டுவது போன்றவை)///
கடலை எனும் தலைப்பில் எங்கேயோ கவுத்திட்டீங்க.... அருமையாக இருந்தது...
நண்பருடைய மின்னஞ்சல் சாயல் தானோ இதோ?....
ஆகட்டும்,,,,, ஆகட்டும்.... வாழ்த்துக்கள்.....
கார்த்திக்,கடலை !வாவ்...வாவ் என்ன அருமையான விளக்கம்.உண்மையில் அதிர்ந்துபோனேன்.இன்னும் நீங்க நிறைய எழுதணும்.
நாங்க கடலைப் போடுவது இப்படித்தான்.
இரண்டு சால்கள் (அதாவது இரண்டு முறை ) ஆழ உழுத நிலத்தில், ஈரப்பதம் இருக்கும் தருணத்தில் இரண்டு கலப்பைகளில் ( நிலத்தின் பரப்பளவை பொறுத்து 1,2,3,4 ) ஒவ்வோரு கலப்பைக்கும் இரண்டு காளைகளை பூட்டி, நிலத்தை மூன்றாம் முறையாக உழும் போது, கலப்பையின் கொழு கிழித்துச்செல்லும் நீண்ட குழியில் இன்னேரு ஆள் (பெரும்பாளும் பெண்) கையில் வைத்திருக்கும் கூடையிலிருந்து...கடலையை எடுத்து போட்டுக் கொண்டே செல்வார்கள். இதுதாங்க கடலைப் போடுவது... இதை விடுத்து என்னமோ எழுதுறிங்க..ஒன்னுமே புரியல.
யப்பா சாமி தாங்க முடியல... நல்லா சொல்லிருக்கீங்க.
---
//ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது..//
ஆணும் ஆணும் இப்படி பேசினா அதை ‘பொங்கல்’ என்போம்... இங்கே மொக்கை என்றும் சொல்கிறார்கள்.
பெண்ணும் பெண்ணும்...? பெண்கள் யாராவது சொல்லுங்களேன்.
//கெட்டிகாரதனமாக மாதந்தோறும் 20000 sms-கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்..//
அதுக்கும் நம்மதாம்ப்பா பில் கட்டனும்...
ஏக்சுவலி.. பாத்தீங்கன்னா.. ஹா.. ஹா.. வ்வெல்.. ய்யா.. ஏக்சுவலி.. இடுகை சூப்பர் !
/* சப்ராஸ் அபூ பக்கர் said...
கடலை எனும் தலைப்பில் எங்கேயோ கவுத்திட்டீங்க.... அருமையாக இருந்தது.. */
வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி சப்ராஸ் அபூ பக்கர்..
/ * ஹேமா said...
கார்த்திக்,கடலை !வாவ்...வாவ் என்ன அருமையான விளக்கம்.உண்மையில் அதிர்ந்துபோனேன்.இன்னும் நீங்க நிறைய எழுதணும். */
வாங்க ஹேமா.. பாராட்டுகளுக்கு நன்றி..
/* சி.கருணாகரசு said...
நாங்க கடலைப் போடுவது இப்படித்தான். */
வாங்க சி.கருணாகரசு.. நீங்க சொல்ற மாதிரியும் போடலாம்.. இது ஹைப்ரிட்..
/* எவனோ ஒருவன் said...
யப்பா சாமி தாங்க முடியல... நல்லா சொல்லிருக்கீங்க. */
வாங்க பெஸ்கி.உங்களைதான் எதிர் பாத்தேன்.. நீங்க தான் ரெண்டு நம்பர்-க்கும் சேத்து பில் கட்டுறீங்க போல..
/* ஜெகநாதன் said...
ஏக்சுவலி.. பாத்தீங்கன்னா.. */
வருகைக்கு நன்றி ஜெகநாதன்..
//வாங்க பெஸ்கி.உங்களைதான் எதிர் பாத்தேன்.. நீங்க தான் ரெண்டு நம்பர்-க்கும் சேத்து பில் கட்டுறீங்க போல..//
கட்டிக்கிட்டு இருந்தேன்... ஒரு காலத்துல.
கடலைல கோட்டை போட்டவன்ப்பா நீ....
கலக்கல்.....
முடிஞ்ச இதை ஏதாவது ஒரு universityயில்
சமர்பிக்கவும்...
டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்.
//எந்தஒரு கட்டத்திலும் "அப்புறம்" என்று சொல்லி விடாதீர்கள்.
என்ன??? "அப்புறம்" சொல்லாமல் கடலையா??? முடியுமா??? இங்க பாதிபேரோட பொழுது ஓடிட்டு இருக்குறதே "அப்புறம்" வார்த்தையால தான்....
/* எவனோ ஒருவன் said
கட்டிக்கிட்டு இருந்தேன்... ஒரு காலத்துல. */
இனிமேலும் கட்ட என் வாழ்த்துக்கள் பெஸ்கி
/* ஜெட்லி said...
கடலைல கோட்டை போட்டவன்ப்பா நீ.... கலக்கல்..... */
வாழ்த்துகளுக்கு நன்றி ஜெட்லி..
/* கயல்விழி நடனம் said...
என்ன??? "அப்புறம்" சொல்லாமல் கடலையா??? முடியுமா??? இங்க பாதிபேரோட பொழுது ஓடிட்டு இருக்குறதே "அப்புறம்" வார்த்தையால தான்.... */
அட நீங்க வேர கயல்விழி, நம்ப அப்புறம் சொன்னா அவளோ தான் "ஃபோன வைக்கப் போறியா-னு கேப்பாங்க "
உங்கள் நடை(கை)சுவையாக உள்ளது..
அப்புறம்
அப்புறம், வேற என்ன என்னும்
இரு வார்த்தைகள்
கடலையில் மட்டும் கமாக்கள்,
முற்றுப்புள்ளிகள் அல்ல....
Post a Comment