Tuesday, 1 September 2009

2020 -இல் தமிழ்நாடு ஓர் பார்வை -பகுதி 1

தலைப்ப பாத்தவுடனே நான் எதோ ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லப்போறேன்-னு நெனைக்காதீங்க.

இப்படியே நம்ப தமிழ் நாடு 2020 வரைக்கும்இருந்தா எப்படி இருக்கும்னு நேத்து நைட்டுதூங்கறப்ப யோசிச்சுபாத்தேன். எனக்கே சிரிப்புவந்துச்சு..

நான் கண்ட காட்சி நிறைவேறினால்...



ஹீ ஹி ஹீ...
  • தமிழ்நாடு தனி நாடு ஆனது..தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான தி.மு. மற்றும் .தி.மு.இணைந்தன. (எப்படி..இப்ப சந்தோஷமா..??)
  • தமிழ்நாட்டு பிரதமமந்திரி டாக்டர் மு கருணாநிதி தனது 95 -வது பிறந்தநாளைசென்னையில் கொண்டாடினார்.
  • துணை பிரதம மந்திரி செல்வி ஜெயலலிதா, வடசென்னை முதல்வர் மு ஸ்டாலின், தென்சென்னை முதல்வர் மு..அழகிரி, மத்திய சென்னை முதல்வர்தயாநிதிமாறன், மதுரை முதல்வர் விஜயகாந்த் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் உள்ளது" என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்..
  • தமிழகம் முழுவதும் புல்லட் ரயில் இயக்கப்பட்டது.. மணிக்கு 600-கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் சென்னைலிருந்து மதுரைக்கு 1 மணி 15 நிமிடத்தில் சென்றடையும்.
  • "பறக்கும் கார்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விரைவில் தீர்க்கப்படும்" என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது,.
  • ATM-களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க "தெருவுக்கு ஒரு ATM" என்றதிட்டத்தை அரசு விரைவில் துவக்கும் என்று அறிவித்துள்ளது..
  • TASMAC-யின் நிகர லாபம் 600 கோடிகளை தொட்டது.. தமிழ்நாட்டில் அதிகலாபத்தில் செல்லும் துறைகளில் முதல் இடத்தில பிடித்து TASMAC.
  • பொதுதேர்வுகளில் bit அடிப்பதை தடுக்க ஒவ்வரு தேர்வு அறைகளிலும்கண்காணிப்பு கருவி பொருத்துபடவுள்ளது.. இதனால் கண்காணிப்புஅதிகாரிகளின்றி தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்விதுறை அமைச்சகம்கூறிவுள்ளது..
குறிப்பு: மேற்கூறியவை அனைத்தும் கற்பனையே. எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. நினைத்துபார்க்க மட்டுமே. சிந்திக்க இல்லை என்பதை கூறிகொள்கிறேன்..

3 comments:

க.பாலாசி said...

//இரண்டு பெரிய கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.கஇணைந்தன. (எப்படி..இப்ப சந்தோஷமா..??)//

ஏன்யா...இந்த ஆச வேற இருக்கா உங்களுக்கு...

ஒரு கட்சி ஆட்சி நடத்துறப்பவே நாசமா போயிடுச்சு...இதுல ரெண்டும் சேந்தா....அய்யோ நெனைச்சு கூட பாக்க முடியல....

நல்லாருக்கு நண்பா உங்களின் கற்பனை பதிவு...

ஆமா...உங்க பிளாக்ல பாளோயர் லிட்ஸ்ல் காணோம்....

Beski said...

எல்லாம் கற்பனைதான?
கடைசிக்கு முந்தினது மட்டும் நடக்கும்.

ஹேமா said...

கார்த்திக்,நாங்க நினைக்கிறதெல்லாம் நடந்திட்டா நம்ம அரசியலும் நாடும் ஏன் இப்பிடி இருக்கு!