Wednesday, 22 July 2009
தோசை நேற்றைய விலை 40 ரூபாய் .. இன்றைய விலை 50 ரூபாய் ...
அரிசி, பருப்புகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் தமிழக ஹோட்டல் மெனு கார்டுகளில் உள்ள மெனுக்களின் விலை விரைவில் உயரப்போகிறது.. துவரம் பருப்பு விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 100-ஐத் தொட்டது. இதேபோல் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நெய், புளி, மிளகாய்வற்றல், உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு என எல்லா பொருட்களின் விலையும் ஏறுமுகமாவே உள்ளது.
கொஞ்சநாளைக்கு முன்னாடி எல்லா ஹோட்டல்-லயும் ஜனதா சாப்பாடு-ன்னு அறிமுகப்படுதுனாங்க.. சும்மா சொல்ல கூடாதுங்க.. நல்ல வரவேற்ப்பு.. 20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு,சாம்பார்,ரசம்,பொறியல்-னு மக்களுக்கு தந்தாங்க..
ஜனதா சாப்பாடு கிடைக்கும் -னு பெயிண்ட்-ல எழுதின போர்டு காயரதுக்குள்ள அந்த திட்டத்தையே நிறுத்திடாங்க..
இப்போ எல்லா ஹோட்டல்-லும் நம்ப சரவணபவன், வசந்தபவன், சங்கீதா மாதிரி ஆகிப்போசுங்க.. நானும் ஊருக்குள்ள போய் ஒரு இட்லி கடைய நிறுவி கல்லாவுல உட்கார்ந்துரலாம்னு இருந்தேன்.. என் நெனப்புல பருப்பு விழுந்துருச்சுங்க..
ஒரு குடும்பம் டிபன் சாப்பிட போனா இப்போ குறைஞ்சது 1000 ரூபாய் எடுத்து வைக்கணும்.
சாப்பாடுக்குதான் இந்த நிலைமைனா டிபன் மெனுக்களை பற்றி சொல்லவே வேணாம்.
என்று தணியும் இந்த விலைவாசி உயர்வு?
உங்கள் கவனத்திற்கு: வெளி நாடுகளில் உள்ள தமிழ் ஹோடேல்களிலும் இதே செலவுதாங்க ஆகுது..
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நம்ம ஏரியா மெஸ்ல அல்ரெடி கூட்டியாச்சு. தோசை 5 லிருந்து 10, வடை 2 லிருந்து 3, பூரி 8 லிருந்து 10.
முட்டை மட்டும் விலை ஏத்தல.
appadiyaa....
vilai kuraiya vendum endraal alichittu eluthi poda vendiyathuthaan.
// எவனோ ஒருவன் said...
நம்ம ஏரியா மெஸ்ல அல்ரெடி கூட்டியாச்சு. தோசை 5 லிருந்து 10, வடை 2 லிருந்து 3, பூரி 8 லிருந்து 10.
வருகைக்கு நன்றி தோழரே.. அதையும் ஏத்திருவாங்க சீக்கிரத்துல..
// நையாண்டி நைனா said...
appadiyaa....
vilai kuraiya vendum endraal alichittu eluthi poda vendiyathuthaan.
இதுக்கு தான் ஊருக்குள்ள உங்கள மாதிரி ஒரு ஆள்-இன்-ஆள் அழகுராஜா வேணும்ங்கறது..
வருகைக்கு நன்றி தோழரே..
//ஜனதா சாப்பாடு கிடைக்கும் -னு பெயிண்ட்-ல எழுதின போர்டு காயரதுக்குள்ள அந்த திட்டத்தையே நிறுத்திடாங்க..//
இது பேரு தான் பன்ச் குடுக்குரதா " ? " நல்லாத்தான் ரோசன பண்ணி சொல்லிக்கீரே தலீவா !!
ஒரு குடும்பம் டிபன் சாப்பிட போனா இப்போ குறைஞ்சது 1000 ரூபாய் எடுத்து வைக்கணும்.
சரியா சொன்னீங்க
//வெளி நாடுகளில் உள்ள தமிழ் ஹோடேல்களிலும் இதே செலவுதாங்க ஆகுது.. //
வெளி நாடுகளில் உள்ள ஓட்டலையும் இதையும் ஒப்பீடு செய்ய முடியாது. துபாயில் விவசாயம் கிடையாது, காய் கறிகள் நம்ம ஊரில் இருந்துதான் வரவேண்டும். உள் நாட்டில் அப்படி இல்லையே?? செங்கல்பட்டில் கீரை கட்டு 2 ரூபாய், சென்னையில் 10 ரூபாய், இதை எங்க போய் சொல்றது??
ஆசை ..தோசை ....அப்பள வடை....!!!
இதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது!
டவுசர் பாண்டி,sakthi,jothi,யூர்கன் க்ருகியர் வருகைக்கு நன்றி..
டவுசர் பாண்டி,sakthi,jothi,யூர்கன் க்ருகியர் வருகைக்கு நன்றி..
ஆமா கார்த்தி! சாப்பிட கடைக்குப் போனா மெனுகார்ட்டில இருக்கிற ரேட்டைப் பாத்தே அல்சர் வந்திரும் போல! இது கூட தேவலை. ஒரு சில ஓட்டல்களில் ரேட் போடாம மெனு கார்ட் இருக்கும். அப்ப நல்லா ரசிச்சு ருசிச்சு கூட சாப்பிட முடியாது.
/* ஜெகநாதன் said...
ஆமா கார்த்தி! சாப்பிட கடைக்குப் போனா மெனுகார்ட்டில இருக்கிற ரேட்டைப் பாத்தே அல்சர் வந்திரும் போல... */
கரெக்ட்-ஆ சொன்னீங்க ஜெகநாதன்.. இதுவும் ஒரு வியாபார உத்தி போல.. வருகைக்கு நன்றி தோழரே..
சென்னையில் ரொம்ப கொடுமை தான் :-( போற போக்க பார்த்த பேச்சலர் நிலைமை ரொம்ப பரிதாபம்
Post a Comment