Wednesday, 29 July 2009

விவாகமும் விவாகரத்தும்..


கலி முத்திவிட்டது-னு சும்மாவா சொல்றாங்க.. பதிவோட தலைப்ப பாத்தவுடனே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்..

ஆமாங்க.. கல்யாணம் பண்ணிபார் வீட்ட கட்டிப்பார்-னு சொல்லுவாங்க பெரியவங்க .. ரெண்டுமே கஷ்டம்-னு அத அனுபவிச்சவுங்க சொல்லுவாங்க..

நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.

லச்ச-லச்சமா செலவு செஞ்சு கல்யாணம் பண்றாங்க. கொஞ்ச நாள் கூட சந்தோஷமா வாழ மாட்றாங்க.. "நீ உன் வழிய பாரு.. நா என் வழிய பாத்துக்றேன்"-னு easy-ஆ சொல்லிட்டு பிரிஞ்சிட்றாங்க..

ஏதோ chemistry-ஆம்.. அது இல்ல-னு சொல்லி விலகிடறாங்க..

செரி.. வீட்ல பாத்து வெச்ச கல்யாணம்-தான் இப்டின, சில சமயத்துல காதல் கல்யாணமும் தோல்வியவே தழுவுது..

இதலாம் மீறி வாழ்கைல ஜெய்கிரவுங்க கொஞ்சம் தான்..

ஒன்னு வாழ்கை- வெற்றி அடைறாங்க.. இல்லாட்டி வழக்குல வெற்றி அடைறாங்க (எப்படி..??)..

இதுல Living-together-னு ஒரு கன்றாவி வேற இப்ப வர ஆரம்பிச்சிடுச்சுங்க..

சம உரிமை, சம உரிமை-னு சொல்றாங்களே, அது கூட ஒரு காரணம்-னு சொல்லலாம்..

இந்தியாவில் தற்போது விவாகரத்துஅதிகரித்துள்ளது. குடும்ப நீதிமன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள்நிலுவையில் உள்ளன. இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில்தினமும் 15 விவாகரத்து வழக்குகள்பதிவாகின்றன.


இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்றபாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...

சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதுக்கெல்லாம் distance தாங்க காரணம்... விட்டுக்கொடுத்து போனாலே எல்லா பிரச்சனையும் தீர்ந்துபோய்டும்-கிரது என்னோட கருத்து..

இப்படி
வெரப்பா இருந்தா ரொம்ப கஷ்டம்ங்க ...

4 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இதுல Living-together-னு ஒரு கன்றாவி வேற இப்ப வர ஆரம்பிச்சிடுச்சுங்க..//
கவுண்டர் : இவர் சொல்றத பாத்தா.. கோவப்படுர மாதிறி தெரியல்.. ஆதங்கப்படுற மாதிரி தெரியுது.. நமக்கும் அப்படி ஒண்ணு கிடைக்கலியேண்ணு..

இது நம்ம ஆளு said...

இப்படி வெரப்பா இருந்தா ரொம்ப கஷ்டம்ங்க ... :)

வாங்க நம்ம பதிவுக்கும்

கார்த்திக் said...

குறை ஒன்றும் இல்லை,இது நம்ம ஆளு வருகைக்கு நன்றி..

கார்த்திக் said...
This comment has been removed by the author.